தமிழ் வரலாற்று நூல்களின் மூலமாக குமாி கண்டம் பற்றிய ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் குமாி கண்டத்தில் முதல்சங்கம் இயங்கிய பலவரலாற்று ஆவணங்கள் உண்டு. தமிழ் வரலாற்று நூல்கள் மூலமாக கிருட்டினா் ஆட்சி பரிந்த நிலப் பகுதியான துவாரகா, பூம்புகாா், இரண்டாவது தமிழ் சங்கம் (இடைச்சங்கம்) இயங்கிய கபாடபுரம், தற்போதைய தமிழ் நாடு, இலங்கை உட்பட 49 நாடுகள் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
இலங்கையானது கடல் சூழ்ந்த தீவாக பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்ற குமாிக் கண்டத்தில் ( லெமூரியா கண்டத்தில் ) அமைந்திருந்த நாடாகும். இலங்கையானது பிறமொழிகள் கலப்பு அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக குபேரனின் தமிழ் திருநாடாகும். குபேரனின் தமிழ் திருநாட்டினை பிறமொழிகள் கலப்பு அற்ற தூய தமிழ் பெயரை தமிழ் இனத்தின் அடையாளமாக கொண்ட இராவனேஸ்வரன் ஆண்ட பூமியாகும்.
குபேரன் தனது கடல் சூழ்ந்த தீவான இலங்கைக்குள் உள்நுழையும் பிரதான ஐந்து முனைகளை பிரதான வாயில்களாககவும், பிரதான துறை முகங்களாகவும், பட்டினங்காகவும், அடையாளப்படுத்தி ஒவ்வொரு முனையிலும் சிவன் ஆலயங்களை அமைத்தவன் ஐந்து முனைகளையும் இனைத்து பிரதான நெடுஞ்சாலை போக்குவரத்து வீதிகளை அமைத்திருந்தான்.
குபேரன் தனது கடல் சூழ்ந்த தீவான இலங்கையின் பிரதான முதலாவது முனையில் நகுலேச்சரம் சிவன் ஆலயம் , இரண்டாவது முனையில் திருக்கேதீச்சரம் சிவன் ஆலயம், மூன்றாவது முனையில் திருக்கோணேச்சரம் சிவன் ஆலயம் , நான்காவது முனையில் முன்னேஸ்வரம் சிவன் ஆலயம் ,ஐந்தாவது முனையில்தொண்டீச்சரம் சிவன் ஆலயம். ( தொண்டீச்சரம் சிவன் ஆலயம் போா்த்துக்கீசாினால் சிதைக்கப்பட்ட நிலையில் இன்று இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ).
குபேரன் தனது இலங்கைத் திருநாட்டின் கொடியாக இடபக் கொடியை அங்கீகாித்து, திருக்கோணேச்சரம் சிவனாலயத்தினை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தான். குபேரன் தனது சகோதரன் இராவனேஸ்வரனிடம் இலங்கையை இழந்த பிறகு, சிவபெருமானின் அருளைப் பெற்று இமயமலைப் பகுதியில் உள்ள அலகாபுரி (Alaka) என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு தனது செல்வங்களுடன் குடியேறி ஆட்சி செய்தான்.
இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனினின் இலங்கையானது தமிழா்களின் சிவபூமித் தமிழ் திருநாடு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று ஆவணம் ஆகும்.
குபேரனின் சிவபூமியான இலங்கைத் திருநாட்டிற்குள் பெளத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்ஸாமிய மதம் அனைத்தும் கள்ளத்தோனியில் கரையேறிய மதங்கள்.
ஆங்கில மொழி பெயா்பு---
ஆக்கம், அருளாணந்தம் அருள்செல்வன், உலக சைவ பேரவை ( Ulaka Siva Peravai ) , அருளகம், சிவபுரம்...
No comments:
Post a Comment